பிரிவினைவாதம் பேசுகிறது இந்துத்துவம் – அசாதுதீன் ஓவைஸி!

ஜனநாயக விழுமியங்களைக் கொண்ட நமது தேசத்தில் இந்துக்களோ, அல்லது இஸ்லாமியர்களோ ஆதிக்க மனப்பான்மையை கொண்டிருக்க கூடாது ; இஸ்லாமியர்களுக்கு, இந்தியாவில் பாதிப்பில்லை என்ற கருத்தினை சில சக்திகள் உருவாக்கிட முயல்கின்றன.
அதற்கு, இஸ்லாமியர்கள் பலியாகிவிடக்கூடாது. இந்து மற்றும் இஸ்லாம் ஆகிய மதங்களுக்கிடையேயான எதுவானாலும் பேசிதீர்க்கப்பட வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் இயக்க தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைஸி “இந்தியாவின் அரசியலமைப்பு ஒற்றுமையை பேசுகிறது. ஆனால், இந்துத்துவ கொள்கை பிரிவினை வாதத்தை பேசுகிறது. இதில், எதைப் பின்பற்றுகிறார்கள் ஆர்எஸ்எஸ்ஸும் மோகன் பகவத்தும். இவர்களால் எப்படி ஒற்றுமையை குறித்து பேச முடியுமென” தெரிவித்துள்ளார்.