மேகதாதுவில் அணை கட்டுவதை ஏற்க முடியாது – முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட முயல்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாக உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை ஒன்றினை கட்ட முயன்றுவருகிறது. பெங்களூரின் குடிநீர் தேவைக்காகவே புதிய அணையினை கட்டமுயல்வதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்திருந்ததோடு, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வருக்கும் கடிதம் ஒன்றினை எழுதியிருந்தார்.

அதில், மேகதாதுவில் புதிய அணை கட்டப்பட்டால் இரு மாநில மக்களுக்கும் பயனளிக்க கூடியதாக இருக்கும். தமிழகத்தின் காவிரி படுக்கையில் இரு புதிய மின் திட்டங்கள் செயல்படுகிறது. ஆனால், இது குறித்து கர்நாடக அரசிடம் கலந்தாலோசிக்கவில்லை.

தமிழகம் – கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கிடையே நல்லுறவை மேம்படுத்த விரும்புகிறேன். ஆகவே, புதிய அணை கட்டும் விவகாரம் தொடர்பாக இரு மாநிலங்களுக்கிடையேயான பேச்சுவார்த்தைக்கு தயார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மேற்கண்ட எடியூரப்பாவின் கடிதத்திற்கு பதிலளித்து அவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் எனவும், மேகதாதுவில் அணை கட்டுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்திட கூடாதென ஒன்றிய அரசை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‘செவ்வாய் கிரகத்தில் கூட கால் வைத்து விடலாம்… கோவில் கருவறைக்குள் முடியாது’ ஆசிரியர் கி.வீரமணி கோபம்…!

செவ்வாய் கிரகத்தில் கூட இன்றைய காலகட்டத்தில் மனிதன் கால் வைக்க முடிந்த நிலையில்…