மகனை ஒன்றிய அமைச்சராக்க முயலும் ஓபிஎஸ் – விளாசும் திமுக!

மத்திய அரசை ஒன்றிய அரசு என குறிப்பிடுவதை தவிர்த்து, தேர்தல் சமயத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதில் திமுக அரசு ஈடுபடலாமென அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்த நிலையில், அவரது கருத்துக்கு காட்டமான பதில் கொடுத்துள்ளது திமுக.
இது குறித்து காட்டமாக கருத்து தெரிவிக்கும் திமுக முன்னணி நிர்வாகிகள், நாங்கள் எந்த வகையியிலும் இந்திய இறையாண்மையை மதித்திட தவறவில்லை. மாறாக, அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தே குவித்துக்கொண்டு, மாநில உரிமைகளை பறிக்கும் செயல்களைத்தான் குறிப்பிட்டு காட்டுகிறோம்.
அதேபோல், ஒன்றிய அரசு என மத்திய அரசை அழைப்பதற்கு எவ்வித சட்ட ரீதியிலான சிக்கலும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்திட விரும்புகிறோம் என தெரிவிக்கின்றனர்.
மேலும், ஓபிஎஸ் இந்த விவகாரத்தில் எங்களுக்கு எவ்வித அறிவுரையும் வழங்கிட தேவையில்லை. தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பெற்றிட இவ்வாறான மலினமான செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார் அவர் என்கின்றனர் காட்டமாக.