பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக தடுப்பூசிகள்… திமுக எம்பி குற்றச்சாட்டு!

பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக அளவில் தடுப்பூசி வழங்கப்படுவதாக திமுக எம்பி டி.ஆர் பாலு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இன்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்த பிறகு இதனை அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு 12 கோடி தடுப்பூசி கேட்டுள்ளோம் என கூறிய அவர், மீண்டும் மீண்டும் ஒன்றிய அரசின் கதவை தட்ட வேண்டியுள்ளது எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் திமுக எம்பி டி ஆர் பாலு இவ்வாறு கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.