தமிழகத்திற்கு 71 லட்சம் தடுப்பூசிகள் வழங்கும் மத்திய அரசு!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக வீசி வந்த நிலையில் தற்போது அதன் தீவிரம் குறையத் தொடங்கியுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வந்தது. கையிருப்பில் உள்ள தடுப்பு ஊசிகள் இன்றுடன் முடிவடையும் நிலையில் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி களுக்கான தேவை எழுந்துள்ளது.
இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வருகிற ஜூலை மாதம் 71 லட்சம் தடுப்பூசி வழங்க உள்ளது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுவரை 1.44 கோடி தடுப்பூசிகள் பெறப்பட்டு, 1.41 கோடி பேருக்கு செலுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.