வெளிநாட்டு பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் இந்தியா!

கொரோனா பரவல் ஆரம்பித்த நாள் முதலே சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவில் சுற்றுலா மேற்கொள்வது மிகவும் குறைந்து விட்டது.
இந்நிலையில், தற்போது மத்திய அரசு சுற்றுலாத் துறையை ஊக்கப்படுத்தும் விதமாக வெளிநாட்டு பயணிகளுக்கு இலவச விசா வழங்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, 5 லட்சம் வெளிநாட்டு பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படும் என நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், கொரோனா காலத்தில் முடங்கிப்போன சுற்றுலாத்துறை தற்போது புத்துயிர் பெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.