தடகளப் பயிற்சியாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

சென்னையில் தடகளப் பயிற்சிக்கு வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நாகராஜன் மீது புகார் எழுந்தது.
இதனையடுத்து, தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் கடந்த மே 29 ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.