தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதனையடுத்து, தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.
இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 4804 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு 291 ஆக குறைந்துள்ளது.
இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 98 பேர் பெருந்தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 32,388 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 6,553 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் மொத்த குணமடைந்தவரின் எண்ணிக்கை 24 லட்சத்தை நெருங்கி வருகிறது.