மத்திய அமைச்சரின் டுவிட்டர் கணக்கு முடக்கம்!

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்களின் டுவிட்டர் கணக்கு தற்போது முடக்கப்பட்டு மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

இது குறித்து பேசிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அமெரிக்க டிஜிட்டல் பதிப்புரிமை சட்டத்தை மீறியதாக எனது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக அதிருப்தி தெரிவித்தார்.

ஒரு மணி நேரத்திற்குப் பின்பு மீண்டும் அவரது டுவிட்டர் கணக்கு செயல்பட தொடங்கியுள்ளது.

இருப்பினும், எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி என்னுடைய டுவிட்டர் கணக்கை முடக்கியது சட்டப்படி விதி மீறல் என அமைச்சர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *