தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணத்தால் வருகிற ஜூன் 28-ஆம் தேதி வரை ஊரடங்கு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது, தமிழக அரசு தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கை வருகிற ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

இந்தப் புதிய அறிவிப்பில் வகை இரண்டில் உள்ள 23 மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஜவுளிக்கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த 4 மாவட்டங்களில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் இயங்கலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தின் அனைத்து கடற்கரைகளிலும் காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை நடைப்பயிற்சியை மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *