ஒன்றிய அரசு என்றால் வழக்கு தொடரப்படும்… பாஜக பொதுச் செயலாளர் அறிவிப்பு!

சமீப காலமாக தமிழக அரசு மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைத்து வருகிறது. மேலும், அரசு அறிவிப்பிலும் மற்றும் தலைவர்களின் அறிக்கைகளிலும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில், இன்று தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பது மக்களை திசை திருப்ப முயற்சி என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தேவைப்பட்டால் இவ்வாறு அழைப்பது மீது வழக்கு தொடரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *