கொரோனா நிவாரண பொருட்களை ஜூன் 25-க்குள் வழங்க உத்தரவு!
கொரோனா பரவலின் காரணத்தால் தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது.
தற்போது கொரோனா குறைந்து வருவதால் தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ளது.
இந்த இக்கட்டான காலகட்டத்தில் மக்களுக்கு உதவும் விதமாக ரூபாய் 4 ஆயிரம் நிவாரண தொகையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி முதல் தவணையாக ரூபாய் 2000 அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது.
இரண்டாவது தவணையாக 2000 ரூபாய் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கடந்த ஜூன் 15 முதல் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வருகிற ஜூன் 25-ஆம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 14 மளிகைப் பொருட்களும், இரண்டாவது தவணையாக 2000 ரூபாயும் வழங்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.