பெட்ரோல் மீதான வரி குறைப்புக்கு சாத்தியமில்லை…நிதியமைச்சர் அறிவிப்பு!
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைப்பு சாத்தியமில்லை என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு கடுமையாக உயர்த்தியுள்ளதே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பல மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் ஒரு லிட்டர் விலை 100 ரூபாயை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.