தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 8
ஆயிரத்து 633 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 492 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னை தவிர காஞ்சிபுரம், திருவள்ளூர்,செங்கல்பட்டு, கோவை ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பெருந் தொற்றுக்கு 287 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் மொத்த பலி எண்ணிக்கையானது 30,835 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 19,860 பேர் தொற்றில் இருந்து மீண்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.