விரைவில் மாணவர்களுக்கு டேப்லட் வழங்கப்படும்…பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் டேப்லட் வழங்கப்படுமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
கொரோனா பரவலின் காரணத்தால் மாணவர்கள் அனைவரும் பள்ளிக்குப் போக இயலாத சூழல் நிலவி வருகிறது. இதனால் மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஆன்லைன் வகுப்பில் பயிலும் மாணவர்கள் பலருக்கு போதுமான இணைய வசதி மற்றும் மொபைல் வசதி இருப்பதில்லை.
இந்த சிரமத்தை போக்குவதற்காக தமிழக அரசு மாணவர்களுக்கு டேப்லட் வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
அதன்படி, தற்போது கல்வித்துறை அமைச்சர் அதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.