கொரோனா 3-வது அலை குழந்தைகளைப் பாதிக்கும் என்பதற்கு உறுதியான தகவல் இல்லை…சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி!

கொரோனா பரவல் நாட்டையே அச்சுறுத்தி வருகிறது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக வீசி வந்தது. கொரோனாவின் முதல் அலை முதியவர்களையும், இரண்டாவது அலை இளைஞர்களையும் குறிவைத்துத் தாக்கியது.
கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளைத் தாக்கும் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளைத் தாக்கும் என்பதற்கு உறுதியான தகவல் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கான படுக்கை வசதிகள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.