ரேஷனில் வழங்கும் பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும்…முதல்வர் அறிவிப்பு!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
காணொளி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், பொதுப் போக்குவரத்தை அனுமதிப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரேஷன் பொருட்கள் தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், ரேஷனில் வழங்கப்படும் பொருட்கள் தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், அனைவருக்கும் ரேஷன் அட்டை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் பேசிய அவர், போலி ரேஷன் அட்டைகளை ஒழிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.