தமிழகத்தில் 2 ஆயிரத்தை நெருங்கும் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு!

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுவரை தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 1736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 77 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்காக மத்திய அரசிடம் 45 ஆயிரம் மருந்து குப்பிகள் தமிழக அரசு சார்பில் கேட்கப்பட்டுள்ளது.
இதனை தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தற்போது தெரிவித்துள்ளார்.