அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து புகழேந்தி நீக்கம்!

அதிமுகவின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவியிலிருந்தும் நீக்கப்படுவதாக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும் புகழேந்தி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்த புகழேந்தி, ஒவ்வொரு முறையும் கூட்டணி சேர்வதும் தேர்தல் தோல்விக்கு பின்னர் மற்றவர்களை விமர்சனம் செய்வதும் பாமகவின் வாடிக்கையாக உள்ளது என விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *