எதிர்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அனைத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடனும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

கொரோனா காலம் என்பதால் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிந்து கொள்ளுதல் போன்ற பாதுகாப்பு நடைமுறைகளுடன் கூட்டம் நடைபெற்றது. எம் எல் ஏக்கள் அனைவரும் தங்களுக்கான அடையாள அட்டையுடன் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், எதிர்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ், கொறடாவாக எஸ்.பி வேலுமணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும், துணை கொறடாவாக  அரக்கோணம் எம்எல்ஏ க. ரவியும், பொருளாளராக கடம்பூர் சி. ராஜூவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதோடு, செயலாளராக கே.பி. அன்பழகனும், துணைச் செயலாளராக பி.ஹெச். மனோஜ் பாண்டியனும் தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *