தமிழகத்தில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதால் தமிழக அரசு சார்பில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து, தேனீர் கடைகளையும் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று தமிழக அரசு தேனீர் கடைகள் திறப்பு குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இனிப்பு, கார வகைகள் விற்கும் கடைகளும் காலை 6 மணிமுதல் மதியம் 2 மணிவரை பார்சல் அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நெகிழி பைகளில் தேநீர் பெறுவதைத் தவிர்க்குமாறும், கடைகளின் அருகே நின்று மக்கள் தேநீர் அருந்த அனுமதி இல்லை எனவும் அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் தேநீர் கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *