ஹைட்ரோகார்பன் திட்ட ஏல அறிக்கையை நிறுத்த பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையை திரும்பப்பெறக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

காவிரி டெல்டா மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தின் ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும். பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஏலம் விட்டாலும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது. விவசாய பெருங்குடி மக்களின் நலனையும், காவிரி படுகை வளத்தையும் கண்ணை இமை காப்பது போது தமிழக அரசு காக்கும். அதனால் எதிர்காலத்தில் தமிழகத்தின் எந்த பகுதியையும் ஹைட்ரோகார்பன் ஏலத்துக்காக அறிவிக்கக்கூடாது என தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *