பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சரை கைது செய்ய வேண்டியுள்ளது…காவல்துறை அறிவிப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்து திருமணம் செய்வதாக வாக்குறுதி கொடுத்து ஏமாற்றியதாக அந்த நடிகை புகார் அளித்திருந்தார். நடிகையின் புகாரின்பேரில் அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 6 பிரிவுகளின்கீழ் அவர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
முன் ஜாமீன் கேட்டு மணிகண்டன் அளித்த புகார் மட்டும் விசாரணைக்கு வந்தபோது, நடிகை தரப்பில், மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது எனவும், அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டுவதால் அவரை காவல்துறையினர் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், பாலியல் வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என காவல்துறை வலியுறுத்தியுள்ளது. மேலும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிகண்டன் மீதான முன்ஜாமின் விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை இதனை தெரிவித்துள்ளது.