12 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

கொரோனா இரண்டாவது அலை நாட்டையே புரட்டிப் போட்டுள்ளது.
இந்த கொரோனா இரண்டாவது அலையில் பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அவர்களது கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை சந்தித்து வருகின்றன.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 12 மாநில முதல்வர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
பெரும் தொற்று காலத்தில் மாநில அரசுகள் ஒன்றிணைவது அவசியம் என அவர் கூறியுள்ளார். மேலும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன்களை திருப்பிச் செலுத்த கூடுதல் அவகாசம் தரவேண்டும் எனவும் , இது குறித்து ஒன்றிய நிதியமைச்சர் ரிசர்வ் வங்கி ஆளுநரை வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.