புதிய தடுப்பூசி கொள்கைக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு!

பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி விநியோகம் செய்யப்படும் என இன்று அறிவித்தார்.
அதன்படி, கொரோனா தடுப்பூசி விநியோகத்தை மத்திய அரசே கவனிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த புதிய தடுப்பூசி கொள்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
75 சதவீத தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் பிரதமரின் இந்த புதிய அறிவிப்பை வரவேற்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், தடுப்பூசிக் கொள்கையில் மத்திய அரசின் முந்தைய நிலையை மாற்றிக் கொண்டதற்கு பாராட்டுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி பதிவு மற்றும் சான்று தரும் நடைமுறையை மாநிலங்களிடம் விட்டுவிட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.