இந்தியாவில் 30 ஆயிரத்தை நெருங்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பு!
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை கடந்த ஒரு மாதமாக தீவிரமாக வீசி வந்தது.
தற்போது சில நாட்களாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது.
கொரோனா பரவலின் வேகம் ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும் புதிதாக பரவ ஆரம்பித்த கருப்பு பூஞ்சை நோய் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களும் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 28,252 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 6339 பேருக்கும், குஜராத்தில் 5486 பேருக்கும் கருப்பு பூஞ்சை நோய் உறுதியாகியுள்ளது.
இந்த கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 86 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். மேலும், 62 சதவீதம் பேர் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆளாகி உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.