கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன்பதிவு செய்ய கோவின் இணையதளம் உருவாக்கப்பட்டது.

இந்த கோவின் இணையதளத்தில் கொரோனா தடுப்பூசி முன்பதிவு செய்வதற்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், இன்று மேலும் 9 புதிய மொழிகளில் தடுப்பூசி முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு புதிதாக சேர்க்கப்பட்ட மொழிகளில் தமிழ் மொழி சேர்க்கப்படாததால் பலரும் தடுப்பூசிகளை முன்பதிவு செய்வதில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

மேலும், கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி இல்லாதது குறித்து பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *