இன்னும் இரண்டு நாட்களில் தமிழ்மொழியும் இடம்பெறும்…மத்திய அரசு அறிவிப்பு!
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முன்பதிவு செய்ய கோவின் இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
இந்தக் கோவின் இணையத்தளத்தில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி இடம்பெற்றிருந்த நிலையில் இன்று புதிதாக 9 மொழிகள் சேர்க்கப்பட்டன. ஆனால், அதில் தமிழ் மொழி இடம்பெறவில்லை.
இதனையடுத்து, தமிழ்மொழி இடம் பெறாதது குறித்து பலரும் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் தமிழ் மொழியும் கோவின் இணையதளத்தில் இடம் பெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மொழியாக கோவின் இணையதளத்தில் சேர்க்கப்பட்டு வருகிறது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.