வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா!

தமிழகத்தில் கொரோனா பரவல் மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.
கடந்த 2 வாரங்களாக கொரோனாவின் தாக்கம் சற்று குறைய தொடங்கியுள்ளது.
மனிதர்களைத் தாக்கி வந்த கொரோனா தற்போது விலங்குகளையும் தாக்கியுள்ளது.
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து, பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிங்கங்களின் உடல்நிலையை பராமரிப்பாளர்கள் தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.