திருநங்கைகளுக்கு நிதியுதவி வழங்கும் தமிழக அரசு!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு அவர்களுக்காக ரூபாய் 4 ஆயிரம் கொரோனா நிவாரண நிதியாக அளிக்கப்படும் எனக் கூறியிருந்தது.
அதன் ஒரு பகுதியாக மே இறுதியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முதல் தவணையாக ரூ.2000 தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது.
இன்று முத்தமிழறிஞர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இரண்டாவது தவணையாக ரூ.2000 வழங்குவதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.2000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம் அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள 2956 திருநங்கைகளுக்கு நிவாரண உதவி கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.