12-ஆம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத்தேர்வு ரத்து…பிரதமர் மோடி அறிவிப்பு!

கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாநில கல்வித்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து, சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
மேலும், மாணவர்களின் நலன் கருதி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.