கொரோனா நிவாரண நிதி முதல் தவணையை வாங்காதவர்கள் ஜூனில் வாங்கிக்கொள்ளலாம்…தமிழக அரசு அறிவிப்பு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு கொரோனா கால நிவாரணமாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
நிவாரண நிதியின் முதல் தவணையாக ரூ.2000 அனைத்து ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மே மாதம் வழங்கப்பட்டது.
இந்த முதல் தவணை நிவாரண நிதியை 98 சதவீதம் பேர் வாங்கியுள்ளனர். தற்போது தமிழக அரசு இரண்டாவது தவணையாக ரூ.2000 ஜூன் மாதத்தில் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில், முதல் தவணையில் ரூ.2000 வாங்கத் தவறியவர்கள் தற்போது இந்த ஜூன் மாதத் தவணையில் வாங்கிக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.