கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வைப்பு நிதி! முதல்வர் அதிரடி அறிவிப்பு
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலையால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஆனால், சில வீடுகளில் தாய், தந்தை என இருவரையும் கொரோனாவிற்கு பலி கொடுத்து விட்டு தனியாக இருக்கும் குழந்தைகளும் இருக்கிறார்கள்.
இதனால், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், கொரோனா பெருந்தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் தனி கணக்கு துவங்கப்பட்டு அதில் 5 லட்சம் ரூபாய் வைப்பு நிதியாக அளிக்கப்படும்.
அந்த குழந்தை 18 வயதில் நிறைவடையும் போது அந்த தொகை வட்டியுடன் அந்த குழந்தைக்கு வழங்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார் .
மேலும், அந்தக் குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரை கல்விக் கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் எனவும் தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டார்.
அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் என்பது வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.