தோழர் இரா. ஜவகர் மறைவுக்கு மூத்த பத்திரிக்கையாளர் கோவி. லெனின் இரங்கல்!

இடது சாரி சிந்தனையாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான தோழர் இரா.ஜவகருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளார்.
இவரது மறைவுக்கு மூத்த பத்திரிக்கையாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், மூத்த பத்திரிக்கையாளர் கோவி. லெனின், “ஏற்றுக் கொண்ட தத்துவத்தின் வழியில் வாழ்ந்த போராளி. அடுத்தடுத்த தலைமுறையையும் அதே பாதையில் விரல் பிடித்து அழைத்துச் சென்ற தோழமைத் தந்தை.
கொள்கை வழி நின்ற எழுத்தாளர்-மூத்த பத்திரிகையாளர்-தோழர் இரா.ஜவகர் அவர்களைப் பேரிடர் காலத்தின் கொடுங்கரம் பறித்துக் கொண்டது. போய் வாருங்கள் தோழர். உங்கள் படைப்பு போலவே நேற்று-இன்று-நாளை எப்போதும் எங்களுக்குள் நிறைந்திருப்பீர்கள்” எனத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.