ஜூன் 30 வரை சர்வதேச விமான சேவைக்கு தடை…மத்திய அரசு உத்தரவு!
நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அதிகரித்துவரும் கொரோனாவை கட்டுக்குள் வைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நோய்த்தொற்று பரவலின் எதிரொலியால் சர்வதேச விமான சேவைக்கும் மத்திய அரசு தடை விதித்திருந்தது.
இந்தத் தடையினை தற்போது வருகிற ஜூன் 30 வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இருப்பினும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சர்வதேச சரக்கு விமான சேவையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.