மக்கள் தடுப்பூசி போடத் தயங்குவதற்கு ஸ்டாலின் தான் காரணம்! குற்றஞ்சாட்டும் எடப்பாடி

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தன் சொந்த தொகுதியான சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அரசு மருத்துவமனையில், தமிழக எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதலைமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கொரோனா முதல் அலையைக் கட்டுப்படுத்த முன்னாள் அதிமுக அரசு தவறி விட்டது என ஸ்டாலின் கூறுவது உண்மையில்லை.

ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக இருந்த போது, தெரிவித்த தவறான கருத்துகளும் அச்சம் தெரிவிக்கும் வகையில் பேசியதும் தான் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வராததற்குக் காரணம்.

தற்போது தான் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இப்போது இருக்கும் தமிழகஅரசு கொரோனா காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து காட்டி வருகிறது” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது குற்றஞ்சாட்டயுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு அமைதியை குழைக்கும்  சீமான் மீது போலீசில் வழக்கறிஞர் புகார் 

திருச்சி மாவட்டம், மணப்பாறை டிஎஸ்பி ராமநாதனிடம், அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் அளித்துள்ள புகாரில், …

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்… சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன்

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என கரூர்…