24 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது….மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. முதல் அலையைக் காட்டிலும் கொரோனா இரண்டாவது அலையில் இந்தியாவின் பல மாநிலங்களும் மோசமாக பாதித்துள்ளன.

கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

கடந்த சில வாரங்களாக கட்டுப்பாடுகள் கடுமையாக்கப் பட்டதன் விளைவாக தற்போது நாட்டில் 24 மாநிலங்களில் ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

மேலும், நாட்டில் குணமடைவோரின் விகிதமும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் குணமடைவோர் விகிதம் 90.1 சதவீதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *