குழந்தைகளையும் தாக்கும் கரும்பூஞ்சை! ராஜஸ்தானில் அதிர்ச்சி
இந்தியாவில், தற்போது கொரோனா பாதிப்பைத் தவிர மேலும், ஒரு நோய் அச்சமூட்டுவதாக மாறி பரவி வருகிறது.
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்களை கரும்பூஞ்சை நோய் அதிகமாகப் பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தமிழகத்திலும், கரும்பூஞ்சையினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்கிறது.
இந்நிலையில், ராஜஸ்தானில் 18 மாதக் குழந்தைக்கு கரும்பூஞ்சைத் தொற்றி உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரும்பூஞ்சை தொற்று முதல் முறையாக குழந்தைக்கும் பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.