ஏழு பேரும் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும்! சுப்ரமணியன் சுவாமி கடிதத்தால் பரபரப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரும் சிறையில் இருந்து வருகின்றனர். கடந்த 30 வருடங்களாக சிறையில் இருந்து வரும் அவர்களை விடுவிக்கக்கோரி பலர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் இந்த எழுவர் விடுதலைக் குறித்து அண்மையில் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், பாஜகவின் மூத்தத் தலைவர் சுப்ரமணியன் சுவாமியும் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “ஏழு பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக முதல்வரின் பரிந்துரையை நிராகரிக்குமாறு சுப்பிரமணியன் சுவாமி கோரியுள்ளார்.

மேலும், இந்திய அரசு இலங்கைக்கு அனுப்பிய அமைதிப் படையின் ஆயிரக்கணக்கான வீரர்களை விடுதலைப் புலிகள் இயக்கம் கொலை செய்ததாகவும், அந்த இயக்கத்தினர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்ததாகவும் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார். படுகொலையில் தொடர்புடைய பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை எக்காரணம் கொண்டும் விடுதலை செய்யக் கூடாது என்றும், 7 பேரும் தங்கள் வாழ்நாள் இறுதிவரை சிறையிலேயே இருப்பதை குடியரசுத் தலைவர் உறுதி செய்ய வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் எதிர்காலத்தில் இதே மாதிரி பரிந்துரைகள் வந்தாலும் அதனை ஏற்கக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *