இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனாவின் பாதிப்பு மூன்று லட்சத்தைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் தினசரி கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது.
நேற்று மட்டும் 1,96,427 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்புகள் 2,69,48,874 ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய 38 நாட்களில் நேற்று தான் பாதிப்பு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில் 3,511 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 3,07,231 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,40,54,861 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 25,86,782 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.