ரேஷன் கடைகளில் முதல்வர் படம் இடம் பெறுவதில் தவறில்லை….சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வருகிற மே 31-ஆம் தேதி முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள் ரேஷன் கடைகள் மூலமாக நிவாரணப் பைகளாக வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்படும் ரேஷன்கடைகளில் முதல்வரின் புகைப்படம் இடம் பெறலாமா என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கொரோனா நிவாரணம் வழங்கும் ரேஷன் கடைகளில் முதல்வரின் படம் இடம்பெறுவதில் தவறில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆட்சியமைத்த கட்சியின் சின்னம் இடம்பெறக் கூடாது எனவும் கூறியுள்ளது.
நிவாரண உதவி தரும்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை அரசு மற்றும் மக்கள் பின்பற்ற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம்அறிவுறுத்தியுள்ளது.