பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்!
சென்னையில் பாலியல் புகாருக்கு ஆளான பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அதனைத்தொடர்ந்து பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர், தாளாளர் இருவரிடமும் முதன்மைக் கல்வி அலுவலர் அனிதா தொலைப்பேசி வாயிலாக விசாரணை நடத்தினார். இந்த நிலையில் அவர் தற்போது பிரச்னை குறித்தான உரிய விளக்கம் கேட்டு பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பள்ளியிடம் இருந்து விளக்கம் கிடைத்தப்பிறகு இயக்குநருக்கு அறிக்கை அனுப்பப்படும் என முதன்மைக் கல்வி அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.
பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ள முன்னாள் மாணவர்கள், பாதிக்கப்பட்ட மாணவிகள் விபரம் வெளிப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.