முழு ஊரடங்கில் ரேஷன் கடைகள் இயங்க அனுமதி!

தமிழக அரசு வருகிற மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப் படுவதாக அறிவித்துள்ளது.
இந்த முழு ஊரடங்கு காலத்தில் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ரேஷன் கடை தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் முழு ஊரடங்கில் ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.