அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை தொற்று!

கொரோனா தொற்று பாதிப்புக்கு அடுத்து அதிகமானவர்களுக்குத் தற்போது, கருப்பு பூஞ்சை நோய் பாதித்து வருகிறது.

மேலும், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்களையும் நீரிழிவு நோயாளிகளையும் இந்த நோய் அதிகம் பாதித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், “ இந்தியாவில் தற்போது வரை 18 மநிலங்களில் 5424 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 4556 பேர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்கள்.

அதுமட்டுமல்லாமல் அவர்களில் 55% பேருக்கு நீரிழிவு நோய் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *