புதிதாக 9 எம்.எல்,ஏக்கள் பதவியேற்பு!
![](https://thenewslite.com/wp-content/uploads/2021/05/E2IUKgWVgAI1hEA-e1621837826926.jpg)
தமிழகத்தில், நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு முன்னிலையில் மே 11 ஆம் தேதி நடைபெற்ற முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தில் பதவியேற்றுக் கொண்டனர்.
இதில், உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏக்கள் 10 பேர் பதவியேற்பு விழாவில் முடியவில்லை.
இந்நிலையில், அவர்களின் 9 பேர் இன்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். உடல்நிலை சரியாகாத திமுக எம்.எல்.ஏ. சண்முகையா மட்டும் பதவியேற்கவில்லை. இந்த பதவியேற்பு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டானும் கலந்து கொண்டார்.