மதுரையில் 100 ரூபாய்க்கு 10 வகையான காய்கறிகள்

தமிழகத்தில், அதிகரித்து வரும் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக இன்று முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்களின் அன்றாட காய்கறித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அரசு நடமாடும் அங்காடிக் கடைகளை அமைத்துள்ளது.

அதன்படி, மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் 125 வாகனங்களில் நடமாடும் வாகனங்கள் விற்பனை தொடங்கியது. அதில், ஒரு பையில் கத்திரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம், தக்காளி, தேங்காய், அவரைக்காய், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, புதினா என 10 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு 100 ரூபாய்க்கு வார்டு வாரியாகச் சென்று வழங்கப்படுகிறது.

மக்கள் இதனைப் பயன்படுத்திக் கொண்டு வெளியில் செல்லாமல் இருக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *