வாகனங்களில் காய்கறி விற்க அனுமதி!
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இரண்டு வாரத்திற்கு முழு ஊரடங்கு பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் படி மே 10 முதல் மே 24 வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்தது.
இரண்டு வார கால ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில் தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் மே 22, மே 23 ஆகிய இரு தினங்களுக்கு தமிழகத்தில் எந்தவித தடையுமின்றி கடைகள் மற்றும் பேருந்துகள் இயங்கும் என அறிவித்தது.
அதன் பின் மீண்டும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதில் முன்பு அனுமதி அளித்து இருந்த காய்கறி கடைகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை காய்கறிகள் விற்கலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
முழு ஊரடங்கால் கடைகள் மூடப்பட்டு உள்ளதால் 4380 வாகனங்கள் மூலம் காய்கறிகளை விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.