புயல் முன்னெச்சரிக்கையாக 12 இரயில்கள் ரத்து
மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று(22.5.2021) காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக வலுப்பெற்று 24 ஆம் தேதி வடமேற்கு திசையில் நகர்ந்து 26 ஆம் தேதி மேலும் வலுவடைந்து ஒடிஸா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகம் உள்பட புயலால் பாதிக்கப்படும் மாநிலங்கள் வழியாக செல்லும் மொத்தம் 9 ரயில்கள் இருவழிகளிலும், 4 ரயில்கள் ஒருவழியிலும் ரத்து செய்து ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.