தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி
கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது, அதைக் காவல்துறையினர் கட்டுப்படுத்த முயற்சிக்கையில் வன்முறை வெடித்தது.
இதன் காரணமாக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று கடைபிடிக்கப்படுகிறது. உயிரிழந்த 13 பேருக்கும்குமரெட்டியபுரம், பண்டாரம்பட்டி, மீளவிட்டான், திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும், தி.மு.க எம்பி கனிமொழியும், அமைச்சர் கீதாஜீவனும் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
முதலைச்சர் மு.க. ஸ்டாலின், போராட்டத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கும் காயமடைந்த 4 பேருக்கும் என மொத்தம் 17 பேருக்கு நேற்று (21.5.2021) அரசுப் பணி நியமன ஆணையை வழங்கினார். மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ரோராடிய மக்கள் மீது போடப்பட்டிருந்த வழக்குகளை அரசு வாபஸ் பெறுவதாக அறிவித்தது.