இன்றும் நாளையும் பேருந்துகள் இயங்கும்
கொரோனா அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் அதன் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு, மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் ஏதும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தேவைப்படும் பொருட்களை வாங்குவதற்காக நாளை ஒரு நாள் முழுவதும் எவ்வித தளர்வுகளும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக வெளியூர்களுக்கு பயணம் செய்பவர்களுக்கு ஏதுவாக இன்றும் நாளையும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் என அரசு அனுமதியளித்து உள்ளது.
தொடர்ந்து பொதுமக்களின் வசதிக்காக இரு நாட்களுக்கு 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.